பாவனி பிறந்தநாள்…. அந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த அமீர்…. வைரலாகும் Photos….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாவனி பிறந்தநாள்…. அந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த அமீர்…. வைரலாகும் Photos….!!!!

Published

on

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி. பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.

பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். அண்மையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு அசத்தினர்.அதில் பல்வேறு வேடங்களை அணிந்து நடனமாடி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதல் ப்ரபோஸ் செய்வது மற்றும் அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

Advertisement

விஜய் டிவியில் தற்போது காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.மேலும் அவர்கள் அஜித்தின் துணிவு படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.இந்நிலையில் அமீர் பாவணியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Amir A D S இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@amir__ads)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in