LATEST NEWS
நடிகை ரோஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. பிரம்மாண்ட வரவேற்பில் நெகிழ வைத்த ஆதரவாளர்கள்…. வைரல் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார்.
அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரோஜா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு கட்சியின் ஆதரவாளர்கள் கிரேனில் தூக்கி வந்த பிரம்மாண்ட ரோஜா மாலையை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரோஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனமும் செய்தார். தற்போது ரோஜாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
