இனி வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருக்கணும்…. அரிய நோயால் பாதிக்கப்பட்ட நடிகை பூனம் கவுர்…. வெளியான திடுக் தகவல்….!!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருக்கணும்…. அரிய நோயால் பாதிக்கப்பட்ட நடிகை பூனம் கவுர்…. வெளியான திடுக் தகவல்….!!!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை பூனம் கவுர். ஹைதராபாத்தில் பிறந்த இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார்.மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கிய இவருக்கு மாயாஜாலம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் நடிகை பூனம் கவுர் தொடர்பான ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது இவருக்கு பைப்ரோமியோல்ஜியோ என்ற கொடிய நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நோய் வந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அதோடு தான் அவர் வாழ பழகிக் கொள்ள வேண்டும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

அதே சமயம் பரவலான தசை கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி ரசிகர்கள் பலரும் கமாண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in