பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை?…. கேட்டதும் ஷாக்கான ரசிகர்கள்…. அது யார் தெரியுமா….??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை?…. கேட்டதும் ஷாக்கான ரசிகர்கள்…. அது யார் தெரியுமா….???

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு குடும்ப பெண்ணின் கதையை அப்படியே அற்புதமாக எடுத்துரைக்கும் இந்த சீரியலை தினம் தோறும் தவறாமல் பார்க்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த சீரியலில் சுஜித்ரா, சதீஷ் மற்றும் ரேஷ்மா என பலர் முக்கிய இடத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியா வேடத்தில் நடித்து வரும் சுஜித்ராவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு மற்றொரு வாழ்க்கை நடத்திவரும் நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் எழில் காதலி அமிர்தாவாக நடித்து வருபவர் தான் ரித்திகா.

Advertisement

இவர் வினு என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றுள்ளார். இந்நிலையில் நடிகை ரித்திகா திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்த முடிவு செய்து பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in