திடீரென வேறு சேனலுக்கு ஹீரோவாக கமிட்டான ரோஜா சீரியல் நடிகர்?…. உண்மையை போட்டு உடைத்த சிபு சூர்யன்…. ரசிகர்கள் ஷாக்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென வேறு சேனலுக்கு ஹீரோவாக கமிட்டான ரோஜா சீரியல் நடிகர்?…. உண்மையை போட்டு உடைத்த சிபு சூர்யன்…. ரசிகர்கள் ஷாக்….!!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரோஜா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையில் டாப் சீரியல் லிஸ்டில் ரோஜா சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. தினம்தோறும் இந்த சீரியலை தவறாமல் பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இதனிடையே அந்த சீரியலில் அர்ஜுனாக நடிக்கும் நடிகர் சிபு சூரியன் சீரியலை விட்டு விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

அதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்ததால் தனது முடிவை மாற்றிக் கொண்ட சிபு சூரியன் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் விரைவில் ஜீ தமிழின் புது சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த முறையும் அந்த தகவல் உண்மை இல்லை என சிபு விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுவரை எந்த ஒரு ப்ராஜெக்டிலும் கமிட்டாகவில்லை எனவும் அடுத்த ப்ராஜெக்ட் என்ன என விரைவில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in