LATEST NEWS
வெண்ணிலா கபடிக்குழு நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் மாயி சுந்தர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இன்று அதிகாலை 2.45 மணிக்கு அவர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரின் சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவர் வெண்ணிலா கபடி குழு மற்றும் குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது மாயி சுந்தர் உயிரிழந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
