LATEST NEWS
ஒரே இடத்தில் ரகசியமாக புத்தாண்டை கொண்டாடிய ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா?…. புகைப்படத்தை பார்த்து காதலை கன்ஃபார்ம் பண்ண ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா. இவர் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக சில நாட்களாகவே பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தங்களுக்குள் அப்படி எதுவும் கிடையாது என இருவரும் கூறி வருகின்றனர். இருந்தாலும் பல இடங்களுக்கு இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து செல்வதால் இவர்களின் காதல் உறுதி தான் என நெட்டிசன்கள் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் கூட இருவருக்கும் திருமணம் நடைபெறுவது போல ஒரு புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் நேற்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் விஜய் தேவரகொண்டா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். புத்தாண்டு புதிய மதம் புதிய நாள் என்று பார்வையாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ராஷ்மிகாவும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்தார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அதில் ஹலோ 2023 என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதனைப் பார்த்ததும் ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். அதேசமயம் விஜய் தேவரகொண்டா கடற்கரை பக்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் ரஷ்மிகாவும் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதனைப் பார்த்ததும் இருவரும் மாலத்தீவில் ஜாலியாக வாழ்கிறார்கள் என கமாண்டு செய்து அந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
