எதர்ச்சியாக ஜாதி பெயரை வெளிப்படையாக கூறிய நடிகை திரிஷா…. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எதர்ச்சியாக ஜாதி பெயரை வெளிப்படையாக கூறிய நடிகை திரிஷா…. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார். டாப் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் திரிஷா. மீண்டும் பட வாய்ப்புகளும் அவருக்கு குவிய தொடங்கியுள்ளன.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் திரிஷா அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கு பிடித்த உணவுகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திரிஷா,எப்போதும் பிராமின் சவுத் இந்தியன் உணவு என்றால் அது என் வீட்டில் தான் பிடிக்கும்,நார்த் இந்தியன் என்றால் ரெஸ்டாரண்டில் இருந்து ஆர்டர் செய்வேன், சைனீஸ், தாய்என பலவித உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன் என்று த்ரிஷா கூறியுள்ளார். உணவு பற்றி கேட்டதற்கு தனது ஜாதியை பற்றி குறிப்பிட்டு பேசியிருக்கும் திரிஷாவின் இந்த பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in