LATEST NEWS
அடடே பிருந்தா மாஸ்டரா இது?…. இளம் பருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்காங்களே…. அன்சீன் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் தான் பிருந்தா மாஸ்டர். இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இடம் பெற்ற பாடலுக்கு கூட இவர்தான் நடன இயக்கம்.
அது மட்டுமல்லாமல் தற்போது சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ள மல்லிகை பூ பாடல் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பிருந்தா மாஸ்டரின் நடனம் தான். அதனைப் போலவே அடுத்த வாரம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் இவர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கட்டாயம் நடன இயக்குனராக பிருந்தா மாஸ்டர் தான் இடம் பெறுவார். இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் ஹே சினாமிகா எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பு படவில்லை.
இதனிடையே முழுவதுமாக தனது நடன இயக்கத்தில் பிருந்தா மாஸ்டர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பிருந்தா மாஸ்டர் இளம் பருவத்தில் குஷ்ப உடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
