LATEST NEWS
சட்டென உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை வனிதா…. அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார்.
அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா வெளியில் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது வனிதா ஒரு படத்திற்காக போட்ட லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து உடல் எடையை குறைச்சிட்டிங்க எனவும் கூறி வருகிறார்கள்.
