1 இல்ல 2 இல்ல 45 வருஷமா ராதிகா சினிமால இருக்காங்க…. ஆனா இன்னும் இது கிடைக்கல…. நடிகர் சரத்குமார் காட்டம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

1 இல்ல 2 இல்ல 45 வருஷமா ராதிகா சினிமால இருக்காங்க…. ஆனா இன்னும் இது கிடைக்கல…. நடிகர் சரத்குமார் காட்டம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என்று பல நூறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

Advertisement

இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் ராதிகா சினிமாவுக்கு நடிக்க வந்து 45 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஹீரோயினியாக நடித்த இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், சிறந்த நடிகை என்று சொன்னால் அதில் ராதிகாவும் ஒருவர், ஆனால் தற்போது வரை அவருக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை, அது ஏன்? என கோபமாக கேள்வி எழுப்பினார். மேலும் மகள் வரலட்சுமியும் சினிமாவை பற்றி நன்கு படித்துவிட்டு தான் நடிகையாக இருக்கிறார் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in