LATEST NEWS
அம்மாடியோ ஒரு நெக்லஸ் இத்தனை கோடியா?…. பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸ் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா தலையே சுத்துது….!!!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகையாகவும் வளம் வருபவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர் தனது திரைபயணத்தை முதலில் நடிகர் விஜயுடன் தொடர்ந்தார். அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த என்ட்ரி கொடுத்தார்.
பின்னர் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் காரணமாக அமெரிக்காவில் குடியேறிய இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்தது. அதுவும் வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டனர். அந்த குழந்தையின் பெயர் மல்டி மேரி.
இந்நிலையில் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது கணவருடன் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய மகள் முகத்தை முதல் முறையாக உலகிற்கு காட்டினார். இதனை தொடர்ந்து நேற்று பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் அமெரிக்காவில் உள்ள மெட் காலா 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் சிவப்பு கம்பளம் பிரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழு வருடங்களுக்கு முன்பு இதே நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் முதன்முதலாக இந்த நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டதாக பிரியங்கா சோப்ரா நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸ் இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது அந்த நெக்லஸ் சுமார் 204 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்கேரி வைர நெக்லஸ் என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த நெக்லஸ் ஜெனிவாவில் உள்ள sotheby’s luxury week இல் ஏலம் விடப்படும் என கூறப்படுகிறது.
https://twitter.com/stacyanomaly/status/1653246317395693568
