மனைவியுடன் வெளிநாடு சுற்றுலா… பில்டிங் மேல் சாகசம் செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண்…. வெளியான புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவியுடன் வெளிநாடு சுற்றுலா… பில்டிங் மேல் சாகசம் செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண்…. வெளியான புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன்தான் ஹரிஷ் கல்யாண். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் நடிகை அமலாபாலும் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

இவர் நடிப்பில் தற்போது 100 கோடி வானவில் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே ஹரிஷ் கல்யாண் குறித்து பலவித காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது இணையத்தில் வளம் வந்தன.

Advertisement

இதனிடையே  தனது காதலியுடன் ஜோடியாக கைகோர்த்து இருக்கும் அழகிய புகைப்படத்தை ஹரிஸ் கல்யாண் வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பெற்றோர்களால் தனது நிச்சயிக்கப்பட்ட நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களின் திருமண நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அங்கு பில்டிங் மேலிருந்து கீழே குதிக்கும் பல சாகசங்களையும் செய்துள்ளார்.

Advertisement

அதே சமயம் தனது மனைவியுடன் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட சில க்யூட்டான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in