LATEST NEWS
வெளிநாட்டில் ஆண் நண்பரோடு நெருக்கமாக இருக்கும்… புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஜோலின் மகள்….!!!
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறைந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்தி மொழியில் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சொற்பமான சில படங்களில் நடித்து வருகின்றார். இவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் கஜோலின் மகள் நைசா தற்போது கல்லூரி படித்து வருகிறார். இவர் பாலிவுட் பிரபலமான ஸ்டார் Kid ஆகிவிட்டார்.
அவர் அடிக்கடி தனது ஆண் நண்பருடன் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது வெளிநாட்டில் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
