மறைந்த நடிகர் சரத்பாபுவின் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா?…. திருமண வாழ்க்கை குறித்த தொகுப்பு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் சரத்பாபுவின் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா?…. திருமண வாழ்க்கை குறித்த தொகுப்பு….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவிற்கு திகழ்ந்த நடிகர் தான் சரத் பாபு. இவர் தெலுங்கில் 1973 ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு 1977 ஆம் ஆண்டு பட்டிய பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சரியாக அந்த திரைப்படங்கள் இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.

Advertisement

அதனால் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ள சரத் பாபு இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினியின் நண்பனாக இவர் நடித்த படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேவரைட் படங்களாக உள்ளன.

இப்படி பல திரைப்படங்களில் பிசியாக நடித்த சரத் பாபு பிரபல நடிகையான ரமா பிரபாவை 1971 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அதன் பிறகு சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் 1988 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு சரத்பாபு எம் என் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

சில வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி கடந்த 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இருந்தாலும் தனது திருமணம் பற்றி பேசிய சரத் பாபு தான் முதலில் திருமணம் செய்து கொண்டது சினேகலதாவை தான் என கூறியுள்ளார்.

அதற்கு முன்னதாக 70 மற்றும் 80களில் ரமா பிரபாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். தன்னைவிட ஐந்து வயது அதிகமான ரமா பிரபாவுடன் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளார்.

Advertisement

தற்போது சரத் பாபுவுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவரை இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in