LATEST NEWS
‘தேன்மொழி பி ஏ’ சீரியல் நடிகை உஷா எலிசபெத்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?..
தமிழ் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் தான் தேன்மொழி பி ஏ.
இந்த சீரியலில் தனது நடிப்பினால் அனைவரிடமும் பாராட்ட பெற்றவர் நடிகை உஷா எலிசபெத். இவர் 1977 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி பிறந்தார்.
இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான கனா காணும் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதில் கனா காணும் காலங்கள் இரண்டாவது சீசனில் ஸ்ரீ என்ற முக்கிய கதாபாத்திரத்தின் அம்மாவாக நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள், சித்தி 2, வைதேகி காத்திருந்தாள், சொந்தபந்தம்,புதுக்கவிதை போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன் நிறைய வேலைகள் பார்த்துள்ளார். ரிசப்ஷனிஸ்ட்டாக, டீச்சராக இருந்திருக்கிறேன், சிட்டரா கூட இருந்திருக்கிறேன். இதுமட்டுமில்லாமல் அப்பளம், வடகம் எல்லாம் செய்து விட்டு உள்ளாராம் .
இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் ராட்ச்சன், நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங் ,பாடகர் ,எழுத்தாளர் ,தொகுப்பாளர் ஒரு என பன்முகத் திறமைகளை கொண்டவர்

நடிகை உஷா சூரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகமகளும் உள்ளார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.
இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22.3k பாலோவர்ஸ் உள்ளனர். தற்போது குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
