LATEST NEWS
பச்சை நிற புடவையில் க்யூட்டான நோக்கில் ரசிகர்களை கவரும் சீரியல் நடிகை ரித்திகா…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரை காதலித்த மிக எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு மாலத்தீவுக்கு தனது கணவருடன் ஹனிமூன் சென்று இருந்தார் ரித்திகா. அங்கு எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்தார். பகிர்ந்திருந்தார்.
அதே சமயம் திருமணத்திற்கு பிறகு இவர் சீரியலில் இருந்து விலகி விடுவார் என பல செய்திகள் உலா வந்த நிலையில், தற்போது அவர் திருமணத்திற்கு பிறகும் தனது திரை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் புடவையில் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
