LATEST NEWS
க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் பிக்பாஸ் ஆயிஷா…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!
சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் ஆயிஷா. இவர் முதல் முதலாக பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் இயக்குனருடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக சீரியலை விட்டு விலகினார்.
அதனைத் தொடர்ந்து மாயா சீரியலில் நடித்த இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார்.
இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் அண்மையில் முடிந்த பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார்.
அதில் அவர் ஓரளவிற்கு நன்றாக விளையாடி மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய காதலர் பற்றி ஆயிஷா அறிவித்த நிலையில் மறுபக்கம் போட்டோ சூட் நடத்தி புதுவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி தற்போது க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
