‘வான்மதி ‘பட நடிகை சுவாதி இப்ப எப்படி உள்ளார் தெரியுமா?.. வெளியான சமீபத்திய புகைபடங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘வான்மதி ‘பட நடிகை சுவாதி இப்ப எப்படி உள்ளார் தெரியுமா?.. வெளியான சமீபத்திய புகைபடங்கள்…

Published

on

இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில்  1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வான்மதி’. இப்படத்தில் அஜித் குமார், சுவாதி, வடிவுக்கரசி ,விஜய் கிருஷ்ணராஜ், பாண்டு, தாமு போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தில் வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை சுவாதி .இவர் ஹைதராபாத்தை பூர்விகமாகக் கொண்டவர்.

Advertisement

இவர் தந்தை கோபால் தாய் சத்தியவாணி.1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான’தேவா’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இவர் தமிழில்  வசந்த வாசல்,விஸ்வநாத்
செல்வா,மாப்பிள்ளை கவுண்டர்,என் இந்தியா,நாட்டுப்புற நாயகன்,சுந்தர பாண்டியன்,துள்ளி திரிந்த காலம் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.  வான்மதி படத்திற்குப் பிறகு தனது படிப்பைத் தொடர தனக்கு வந்த திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு தன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு  2009 ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்   ரீ-என்ட்ரி கொடுத்தார்.

Advertisement

நடிகை மட்டுமல்ல வடிவழகியும் கூட.நடிகை சுவாதி ஹைதராபாத்தில் உள்ள ரெட் ஹில்ஸில் உள்ள மாருதி கார்டன்ஸில் நிறுவன இயக்குநர் கிரண் என்பவரை2009 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.  தற்போது இவரின்  குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in