தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருவிடம் ஆசிபெற்ற…. நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் தம்பதியர்… வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருவிடம் ஆசிபெற்ற…. நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் தம்பதியர்… வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுசை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 18 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஆனால் சில எதிர்பாராத காரணங்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

Advertisement

இவரைப் போலவே ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

Advertisement

ஆனால் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நடிகர் மற்றும் தொழிலதிபர் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இதனைத் தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி விரைவில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் தம்பதியினர் நேற்று தருமபுரம் ஆதீனத்தின்  27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பத் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர்.

Advertisement

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in