LATEST NEWS
தமிழ் சினிமாவில் இதுவரை அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள்…. இதோ மொத்த லிஸ்ட்…!!
பொதுவாக சினிமாவை பொறுத்தவரையில் அதிகபட்சத்தில் உருவான படங்களும் உள்ளன குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களும் உள்ளன. அதில் குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களும் அதிக அளவு வசூல் சாதனை படைத்துள்ளது. அதுவே அதிக பட்ஜெட்டில் உருவான படங்கள் வசூல் சாதனை படைத்தாலும் ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதன்படி தற்போது தமிழ் சினிமாவில் இதுவரை அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2.0
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள எந்திரன் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் தான் 2.0 திரைப்படம். இந்தத் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் சங்கர் இயக்கிய இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 575 கோடி ரூபாய்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்:
பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இது திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. கல்கியின் வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவானது.
பொன்னியின் செல்வன் -1
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. உலக அளவில் மாபெரும் வசூல் செய்த இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடியாகும்.
வாரிசு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 225 கோடியாகும்.
தர்பார்:
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சுமார் 215 கோடி பட்ஜெட்டில் உருவானது.
பிகில்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடித்த விஜய் நடிப்பில் உருவான திகில் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். அட்லி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 285 கோடி ஆகும்.
அண்ணாத்த:
ரஜினி முதல் முறையாக சிவா உடன் கூட்டணி அமைத்து அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த. கிராமத்து பின்னணியில் உருவான இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பூ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 185 கோடி ஆகும்.
பீஸ்ட்:
இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் மட்டுமே 180 கோடி ஆகும்.
கபாலி:
இயக்குனர் பா ரஞ்சித் எழுதிய இயக்கிய மற்றும் கலைப்புலி எஸ் தானு தயாரித்த இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவானது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் ஜான்விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 165 கோடியாகும் .
மாஸ்டர்:
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 165 கோடியாகும்.
