LATEST NEWS
அஜித், விஜய் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் பேபி மோனிகாவா இது?… இப்போ ஹீரோயினி போல் வளர்ந்துட்டாங்களே…!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்தான் பேபி மோனிகா.
இவர் தமிழ் மற்றும் மலையாளம் என பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
தன்னுடைய 10 வயதிலேயே சுமார் 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சமுத்திரக்கனி, கார்த்தி மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தில் இவர் ஒரு சீனில் மட்டுமே நடித்திருந்தாலும் அதுதான் அவரின் திரை வாழ்விற்கு அடித்தளம் போட்டது.
முதலில் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அதனைத் தொடர்ந்து இளைய தளபதி விஜய் உடன் பைரவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்து இருப்பார்.
இந்த திரைப்படம் மூலம்தான் மோனிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு அஜித் மற்றும் விஜய் என இரண்டு பேரையும் மிகவும் பிடிக்குமாம்.
இவர்கள் இரண்டு பேருமே மோனிகாவிற்கு சாக்லேட் வாங்கி கொடுப்பார்களாம். முதலில் கொஞ்சம் பதட்டப்பட்டாலும் சூட்டிங் ஆரம்பித்தவுடன் பயம் எல்லாம் போய்விடும் என மோனிகா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஆண் தேவதை திரைப்படத்தில் அவரின் மகளாக மோனிகா நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் மோனிகாவிற்கு சமுத்திரக்கனி நடிப்பதற்கான பல டிப்ஸ் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான பலூன் திரைப்படத்திலும் மோனிகா குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியான கனா திரைப்படத்தில் நடித்தது ஒரு புதுவிதமான அனுபவம் எனவும் இவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் திரை வாழ்க்கைக்கு கைதி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
மேலும் தீ பிரீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் மம்முட்டியுடன் அமேயாவாக பேபி மோனிகா நடித்தார். ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மங்கள் வந்தால் என்ற திரைப்படத்தில் சிறுவயது ஏஞ்சல் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
மேலும் பெட்ரமாக்ஸ் படத்தில் பேய் குழந்தையாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் அடுத்த திரைப்படத்தில் இவர் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் காதர் பாட்ஷா எனும் முத்தையா படத்தில் இவர் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக பத்து வருடங்களுக்கு மேல் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
குழந்தை முகத்தில் இருந்து வளர்ந்து வரும் பெண்ணாக மாறிவரும் பேபி மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
