LATEST NEWS
சினிமாவை விட்டு திடீரென விலகும் நடிகை காஜல் அகர்வால்… காரணம் என்ன?.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடி காணப்பட்டார். கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு சற்று உடல் எடை கூடியது. தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
அது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி ஸ்லிம்மாக மாறி உள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலகுவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் இரண்டாவதாக காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் இந்த விலக உள்ளார் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.
இருந்தாலும் உண்மை காரணம் என்ன என்று தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய மகனை கவனித்துக் கொள்வதற்காக அவர் சினிமாவில் இருந்து விலகலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. இது தொடர்பாக காஜல் அகர்வால் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
