LATEST NEWS
பிரபல நடிகர் நாகேஷ் மகன் நடிகர் ஆனந்த் பாபுவின் குடும்ப புகைப்படங்கள் …
இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களுக்கு என்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
அப்படி விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘மௌன ராகம்’. இந்த சீரியலை மறைந்த இயக்குனர் தாய் செல்வம் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த சீரியலில் ஷெரின், கிருத்திகா, ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித், ஆனந்த் பாபு, சீமா ஜி. நாயர், அஞ்சலிதேவி தமிழ்ச்செல்வி, நாதன் ஷியாம் போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.
இந்த சீரியலில் விஸ்வநாதன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் ஆனந்த் பாபு. சென்னையை சேர்ந்தவர். இவர் தந்தை நாகேஷ் இவர் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர், இவர் தாய் ரெஜினா இவர் சிறு வயதிலிருந்தே நடனம் ஆடுவதில் மிகவும் திறமையானவராக இருந்தார்.
இவர் முதலில் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அதன் பிறகு இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியான தங்கைக்கோர் கீதம் என்ற படத்தின் மூலமாக எ நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படமானது இவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று.
அதை தொடர்ந்து கடமாய், புயல் கடந்த பூமி, நியாயம் கேட்கிறேன், வெற்றிக்கனி, பலே மித்ருலு, பெண் வீட்டின் கண்கள், கடற்கரை தாகம், பாடும் வானம்பாடி, மௌனம் கலைகிறது, வீடு மனைவி மக்கள், போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியான கோதை மற்றும் பல்லு படாம பாத்துக்க என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் முத்தழகு, மௌன ராகம், கஸ்தூரி, மனைவி, குலவிளக்கு , வாழ்க்கை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சீரியல் மட்டுமல்லாமல் ஈ டிவியில் ஒளிபரப்பான ‘ஆண்டம்’ என்ற தெலுங்கு சீரியலில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்த் பாபு சாந்தி என்பவரை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2013 ஆண்டு விவாகரத்து பெற்றனர்.இவரது இரண்டாவது மகன் கஜேஸ் இயக்குனர் நந்தகுமார் இயக்கத்தில் வெளியான ‘கல்கண்டு’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது .
