LATEST NEWS
“சென்னைக்கு உடனே திரும்புங்க..” 8 அமைச்சர்களுக்கு அவசரக் கடிதம்.. முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரின் 15 மண்டலங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 8 அமைச்சர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் மிக கனமழையைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை உடனே முடுக்கிவிடுமாறு அமைச்சர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒட்டுமொத்த வெள்ள நிவாரண மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்பார்வையிடும் ஒருங்கிணைப்பு அமைச்சராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்களில், திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களுக்கு அமைச்சர் ரமேஷ், தண்டையார்பேட்டை மற்றும் மாதவரத்திற்கு அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் பகுதிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலங்களுக்கு அமைச்சர் விஜய பாலாஜி, கோடம்பாக்கம் மற்றும் வலசரவாக்கத்திற்கு அமைச்சர் பிரபு, ஆலந்தூர் மற்றும் அடையாருக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு அமைச்சர் விக்னேஷ் ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான களப்பணிகளைத் தாமதமின்றி மேற்கொள்ளும் பொருட்டு, நியமிக்கப்பட்ட அனைத்து அமைச்சர்களும் உடனடியாகச் சென்னைக்குத் திரும்பி மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
