தமிழ் சினிமாவில் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினருக்கு நான்கு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். அதில் விஜயகுமார் மகள் நடிகை ப்ரீத்தா, இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார்.

1998 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த சந்திப்போமா என்ற திரைப்படத்தில் நடிகை ப்ரீத்தா அறிமுகமானார்.அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்திலும் இவர் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே இவர் இயக்குனர் ஹரியை மூன்று வருடங்களாக காதலித்து வந்து பின்னர் இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் பிறந்தன.

சினிமாவை விட்டு விலகிய நடிகை ப்ரீதா தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது ப்ரீத்தா ஹரியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் வளையல்களுக்காகவே ஒரு கப்போர்டு வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Pritha Hari இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prithahari_15)