பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தெருக்கூத்து கலைஞர் தாமரைச்செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய இவர் தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும் பிக் பாஸ் வழங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் மிகவும் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர். தன்னுடைய கடன் பிரச்சனைக்காக தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அடிக்கடி சமூக வலைத்தளம் பக்கம் ஆக்டிவாக இருக்கும் தாமரை அண்மையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தாமரை தனது மகனை அறிமுகப்படுத்தியுள்ளார். தாமரைக்கு அவர் குடும்பத்தினர் ஏற்கனவே ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவரால் தாமரை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சில நாட்கள் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டார்.

அதன் பிறகு தாமரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தாமரையின் முதல் மகன் சிவா சந்தித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை புகைப்படம் எடுத்து தாமரை பகிர்ந்து உள்ள நிலையில் அவரின் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.