கேரளாவில் இருந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஷபானா. கிட்டத்தட்ட அந்த தொடர் ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்தது.

இந்த தொடரில் நடித்து வந்த கலைஞர்கள் அனைவரும் வெவ்வேறு தொடர்களில் தற்போது நடிப்பதற்கு கமிட் ஆகி விட்டனர். செம்பருத்தி சீரியல் மூலம் ஷபானாவுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் புதிய தொடரில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார்.

இதனால் இவரின் ரசிகர்கள் எப்போது மீண்டும் நடிக்கப் போறீங்க என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஷபானாவின் புதிய தொடர் குறித்து அறிவிப்பு ப்ரோமோவுடன் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் மிஸ்டர் மனைவி என புத்தம் புதிய தொடரில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஷபானா கமிட் ஆகியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

SHABANA SHAJAHAN ARYAN ⭐️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@its_shabana_)