LATEST NEWS
அடுத்த ஷாக்..! “சாராய ஆலை வச்சிருக்கிறது திமுக, அதிமுக தான்” முதல்வர் விஜய்க்கு அர்ஜுன் சம்பத் வைத்த முக்கிய கோரிக்கை.. அதிரும் அரசியல் வட்டாரம்..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், திமுகவினருக்குத் துணிச்சல் கிடையாது என்றும், ஊழல் வழக்குகளில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள் ஓடி ஒளியாமல் நீதிமன்றத்தில் தங்களை நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்றும் சாடியுள்ளார். நேர்மையானவராக இருந்தால் செந்தில் பாலாஜி சரணடையலாம் என்றும், சாலை அமைக்காமல் ஊழல் செய்த எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட பயத்தின் காரணமாகவே லண்டன் சென்றுள்ளார் என்று தான் நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் மதுக்கடைகளால் மட்டுமே அரசை நடத்த முடியும் என்ற மூடநம்பிக்கையை மக்களிடம் விதைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போதையை ஒழிக்க முதலில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றார். மேலும், திமுக மற்றும் அதிமுகவினரே சாராய ஆலைகளை நடத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) ஆலைகளை நடத்தாததால் விஜய்யால் மதுக்கடைகளை மூட முடியும் என்றும் கூறினார். பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே பிற கட்சியினர் தவெக-வுக்குச் செல்கிறார்களேயொழிய, விஜய்யின் கொள்கை பிடித்து அல்ல என்றும், இதுபோன்ற நபர்களை விஜய் ஊக்குவிக்கக் கூடாது என்றும் அர்ஜுன் சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக அரசு வேலை தருவதாகக் கூறுவது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றதாகும் என்றும், கட்சி சார்பில் உதவலாமே தவிர அரசுப் பணத்தைச் செலவழிப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் ஆளுநரை விமர்சிக்கும் திமுகவின் போக்கிற்கு தவெக துணைபோகக் கூடாது என்றும், இந்துக்களையும் பிரதமர் மோடியையும் அவதூறாகப் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தவெக அரசு அமைந்தால் திமுகவைப் போலன்றி, இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவித்து அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் தனது பேட்டியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
