CRIME
“மனைவியை காதலி வீட்டுக்கு கூட்டிச்சென்ற கணவன்.. அங்கே நடந்த ட்விஸ்ட்.. கல்யாணமான 3வது மாசம் நேர்ந்த கொடூரம்.. காதலியுடன் சேர்ந்து கணவன் போட்ட ஸ்கெட்ச்.. சினிமா பாணியில் அரங்கேறிய பயங்கர கொலை”..!!
ஹரியானாவின் குருகிராம் அருகே உள்ள மனேசரில், திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கணவனே அவனது காதலியுடன் சேர்ந்து சுட்டுக் கொன்ற திகிலூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனேசரில் புகையிலைக் கடை நடத்தி வரும் அங்கித் என்பவருக்கும், 22 வயது பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்த நிலையில், கடந்த மே 21 அன்று அந்தப் பெண் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது, மே 22 அன்று மனேசரில் உள்ள ஒரு வாடகை அறையில் இருந்து அப்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தங்களது 3 ஆண்டுகால கள்ள உறவைத் தொடர்வதற்காக, கணவன் அங்கித்தும் அவனது காதலியான அழகு கலை நிபுணர் ரஜினி தேவியும் இணைந்து, உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பே துப்பாக்கி வாங்கி இந்த கொலைக்கான சதியைத் தீட்டியது விசாரணையில் அம்பலமானது.
திட்டமிட்டபடி மனைவியைக் சுட்டுக் கொன்ற பிறகு, அங்கித்தும் ரஜினியும் ஹரித்வார் வழியாக நேபாளத்திற்குத் தப்பிச் சென்று ஜூன் 30 வரை தலைமறைவாக இருந்துள்ளனர். அவர்கள் மீண்டும் இந்தியா திரும்பியபோது மனேசர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புனேவில் ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலைச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே பாணியில் குருகிராமில் அரங்கேறியுள்ள இந்த கள்ளக்காதல் கொலை வழக்கு குறித்து, ஆயுதத்தை மீட்கவும் கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்கவும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
