CRIME
“அப்பா, அம்மா மருத்துவ செலவுக்கு இந்த காசு போதும்!”.. அரசு அலுவலகத்தில் இளம் பெண் விபரீத முடிவு.. உலுக்கி எடுக்கும் கடிதம்.. கதற வைக்கும் பின்னணி..!!
ஆந்திரப்பிரதேசம் நெல்லூர் மாவட்டம் சில்பூர் மண்டலம் தோணுகுமலா செயலகத்தில் கிராமச் செயலக ஊழியராகப் பணியாற்றி வந்த 27 வயது ஸ்ரீபதி சாய் சந்தனா பிரியா என்ற இளம்பெண், அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ள அவர், தான் கட்டிய 60 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையைக் கொண்டு தனது பெற்றோர் தங்களின் மருத்துவச் சிகிச்சை பார்த்துக் கொள்ள வேண்டும் என அதில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் தனது தந்தை ராமையாவுக்கும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் கஷ்டப்படும் தனது தாய்க்கும் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பிரியா இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பெற்றோர் இருவரும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதைக் கண்டு தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், காப்பீட்டுத் தொகையை நம்பி தன் உயிரை மாய்த்துக் கொண்ட இந்தச் சோகச் சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
