1 இல்ல 2 இல்ல 20 பேர்.. இந்த வயசுல இப்படியா..? மாணவிகளின் படங்களை மார்பிங்க் செய்து… மருத்துவ கல்லூரி மாணவர் செய்த அசிங்கம்… போலீஸ் அதிரடி..!! – cinefeeds
Connect with us

CRIME

1 இல்ல 2 இல்ல 20 பேர்.. இந்த வயசுல இப்படியா..? மாணவிகளின் படங்களை மார்பிங்க் செய்து… மருத்துவ கல்லூரி மாணவர் செய்த அசிங்கம்… போலீஸ் அதிரடி..!!

Published

on

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றிய புகாரில், அதே கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வயநாட்டைச் சேர்ந்த இந்த மாணவர், தனது சக மாணவிகள் மற்றும் சீனியர்களின் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து படங்களைச் சேகரித்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட மாணவருக்கு நீதிமன்றம் உடனடியாக ஜாமீன் வழங்கியது. போலீசார் எளிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாலேயே குற்றவாளிக்கு எளிதில் ஜாமீன் கிடைத்தது என்று சக மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டியதாகவும் புகார் எழுந்தது.

Advertisement

நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்தும், முறையான சட்ட நடவடிக்கை கோரியும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் தீவிர எதிர்ப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து தனித்தனியாகப் புகார்களைப் பெற்று, போலீசார் தற்போது கூடுதல் பிரிவுகளின் கீழ் புதிய எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in