LATEST NEWS
“எங்க வேணும்னு கேளு..?” பெனால்டி கோல் அடித்து நார்வே கோல்கீப்பரை வம்புக்கு இழுத்த நெய்மர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் சுற்றில் பிரேசில் மற்றும் நார்வே அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியின் போது, பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் மற்றும் நார்வே அணியின் கோல்கீப்பர் நைலண்ட் ஆகிய இருவருக்கும் இடையே மைதானத்தில் ஏற்பட்ட காரசாரமான உரையாடல் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் கடைசி கட்டத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்த போது இந்த சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த பெனால்டி கிக் எடுப்பதற்கு சில நொடிகள் முன்பு இருவருக்கும் இடையே என்ன வாக்குவாதம் நடந்தது என்பதை ‘Grok’ என்ற AI தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு உதட்டசைவு மூலம் கண்டறிந்துள்ளனர். அதன்படி, கோல்கீப்பர் நைலண்ட் நெய்மாரிடம் சென்று, “நான் இந்த பெனால்டியை தடுத்து நிறுத்துவேன்” என்று சவால் விட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காத நெய்மார், “நிச்சயமாகவா?” என்று கேட்டுவிட்டு, “உனக்கு பந்து எங்கே வர வேண்டும் என்று சொல்?” என மிகத் திமிராகக் கேட்டுள்ளார். சொன்னபடியே கோல் அடித்த பிறகு, நெய்மார் சிரித்துக்கொண்டே கோல்கீப்பரைப் பார்த்து, “என்னிடம் விளையாடாதே” என்று கூறிச் சென்றுள்ளார்.
இருப்பினும், இந்த ஆட்டத்தில் நார்வே அணியின் எர்லிங் ஹாலாண்ட் அடித்த இரண்டு அதிரடி கோல்களால் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறியது. இப்போட்டியில் நார்வே கோல்கீப்பர் நைலண்ட் பல முக்கிய கோல்களை தடுத்து நிறுத்தி தங்களது வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். பிரேசில் அணி உலகக் கோப்பையை விட்டு வெளியேறியதை அடுத்து நெய்மார் கண்ணீருடன் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார், ஆனாலும் அவருக்கும் நார்வே கோல்கீப்பருக்கும் இடையே நடந்த இந்த மோதல் உலகக் கோப்பையின் மிகவும் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.
