CRIME
“துர்கா பூஜையில் புகுந்த எமன்..!” கூட்டத்திற்குள் தாறுமாறாக ஓடிய ஸ்கார்பியோ கார்.. சிதறி ஓடிய மக்கள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மத்தியப் பிரதேசத்தின் தியோரியாவில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது, அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று சாலையில் பயங்கரமான சாகசங்களில் ஈடுபட்டு மக்கள் மீது மோதி பெரும் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாக் கூட்டத்திற்குள் புகுந்த அந்தக் கார், ஆபத்தான முறையில் தாறுமாறாக ஓட்டப்பட்டதோடு, சாலையில் சென்றுகொண்டிருந்த அப்பாவி மக்கள் மீதும் மோதித் தள்ளியது. இதனால் அங்கிருந்த மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் அந்த இடமே பெரும் போர்க்களமாக மாறியது.
இந்தக் கொடூரமான கார் சாகசம் மற்றும் விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், துர்கா பூஜை பந்தல் அருகே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய அந்த மர்ம கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
