LATEST NEWS
“வண்டிய ஓட்டுனது ஞாபகம் இருக்கா செல்லம்..? ஒருத்தரக் காப்பாத்தப் போய்… மொத்த பேரையும் ‘காலி’ பண்ணப் பார்த்த டிரைவர் அக்கா..! வைரலாகும் 13 செகண்ட் அட்ராசிட்டி..!!”
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு சிறிய வீடியோ கிளிப் இணையவாசிகளைப் பெரும் ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஒரு சிறிய கோல்ஃப் கார்ட் வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கிறது. வண்டியை ஒரு பெண் ஓட்ட, அவருக்கு அருகில் மற்றொரு பெண்ணும், பின் இருக்கையில் ஒரு இளைஞரும் வேறொரு பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் வண்டியை திடீரென வலதுபுறமாக வேகமாகத் திருப்பியதால், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் நிலைதடுமாறி ஓடும் வண்டியிலிருந்து சாலையில் கீழே விழுந்து உருண்டார்.
இதைப்பார்த்து பதற்றமடைந்த பெண் ஓட்டுநர், ஒரு நொடி கூட யோசிக்காமல் சாலையில் விழுந்த தோழியை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், வண்டியை நிறுத்தாமல் நகர்ந்து கொண்டிருந்த கார்ட்டில் இருந்தே கீழே குதித்து ஓடினார். ஆனால், அந்த அவசரத்தில் தான் ஒரு ஓட்டுநர் என்பதையும், வண்டி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும், பின் இருக்கையில் இன்னும் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் முற்றிலும் மறந்துவிட்டார்.
https://twitter.com/i/status/2078163067108553107
ஓட்டுநர் இல்லாமல் கட்டுப்பாட்டை இழந்த அந்த கோல்ஃப் கார்ட் வாகனம், பின் இருக்கையில் இருந்த பயணிகள் பயந்து அலறியபடியே இருக்க, தானாகவே சாலையில் நேராகச் சென்று முன்னால் இருந்த ஒரு பொருளின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. “ஒருவரைப் பாதுகாக்கப் போய், கடைசியில் வண்டியில் இருந்த எல்லோரையும் விபத்தில் சிக்க வைத்துவிட்டார்” என்றும், “அவசரத்தில் தான் ஓட்டுநர் என்பதையே மறந்துவிட்டாரே” என்றும் இந்த வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
