LATEST NEWS
உச்சகட்டம் போர் பதற்றம்!.. அமெரிக்கா காட்டிய பாதையில் நடந்த ‘அந்த’ கொடூரம்.. ஈரான் வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு.. நடுக்கடலில் நேர்ந்த பயங்கரம்.!!
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி உடன்பாடு தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு வல்லரசு நாடுகளும் மீண்டும் போர்க்களத்தில் குதித்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடிக்கும் ஈரான், அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. ஓமன் கடற்கரை அருகே அமெரிக்காவின் மாற்றுப் பாதையைப் பயன்படுத்திய வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், உலக நாடுகளை மீண்டும் பெரும் போர் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது ராணுவ ஆக்ஷனைத் தொடங்க, இரு நாடுகளுக்கும் இடையேயான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. போர் நிறுத்தத்தின் போது ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில், அவை இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. இந்தச் சூழலில், அமெரிக்க உளவுத்துறையின் தவறான வழிகாட்டுதலால் கண்ணிவெடிகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்த இரண்டு அமெரிக்க எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் முடியும் வரை ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஆனால், இந்தத் தகவல்களை முழுமையாக மறுத்துள்ள அமெரிக்க ராணுவம், இது ஈரானின் வழக்கமான வதந்தி எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதற்கிடையே, ஈரானில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக 7-வது நாளாகக் குண்டுமழை பொழிந்து வருகிறது. தலைநகர் தெக்ரான் மற்றும் லாரக், கார்க் தீவுகளில் உள்ள கடல்சார் கட்டுப்பாட்டு மையங்கள் இதில் தகர்க்கப்பட்டுள்ளதுடன், ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, வளைகுடா நாடுகளான பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ மற்றும் விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது.
