LATEST NEWS
“வலியும் தெரியல… பிரசவமும் தெரியல..!” தூக்கத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்த கனடா தாய்..! இது எப்படி சாத்தியம்..!!
கனடாவைச் சேர்ந்த 27 வயதான கரோலினா மொரினோ என்ற மூன்று குழந்தைகளின் தாய், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ‘Group B Streptococcus’ என்ற பாக்டீரியா தொற்று இருந்ததால், அது குழந்தையைப் பாதிக்காமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டு பிரசவ வலியும் தூண்டப்பட்டது. அப்போது பிரசவ வலி மிகக் கடுமையாக இருந்ததால், வலியைக் குறைப்பதற்காக அவருக்கு ‘Epidural’ என்ற மரத்துப்போகும் ஊசி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக வலி குறைந்ததால் கரோலினா சுமார் இரண்டு மணி நேரம் ஆழமான தூக்கத்தில் மூழ்கினார்.
அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, குழந்தையின் இதயத் துடிப்பைக் கண்காணிப்பதற்காக வந்த செவிலியர் சோதித்துப் பார்த்தபோது இதயத் துடிப்பு கேட்கவில்லை. இதனால் பதற்றமடைந்த கரோலினா தனது நிலையை மாற்ற முயன்றபோது, அவரது வயிறு காலியாக இருப்பதை செவிலியர் உணர்ந்தார். பயத்துடன் கரோலினா தனது கால்களை நகர்த்தியபோது, படுக்கை விரிப்பிற்குள் ஏதோ இருப்பது தெரியவந்தது. செவிலியர் விரிப்பை விலக்கிப் பார்த்தபோது, அங்கு ஒரு ஆண் குழந்தை எவ்வித சத்தமும் இல்லாமல் அமைதியாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். செவிலியரின் துரிதமான முதலுதவியால் குழந்தை அழத் தொடங்கி சுவாசித்தது.
https://www.instagram.com/reel/DanC8edjQVS/?utm_source=ig_web_button_share_sheet
யாரும் அறியாமல் தூக்கத்திலேயே வலியின்றி நிகழ்ந்த இந்த வினோத பிரசவ அனுபவத்தை, குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோலினா தனது டிக்டாக் பக்கத்தில் 10 நிமிட வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று பிரசவங்களைச் சந்தித்த பெண்களுக்கும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது போன்ற அரிய நிகழ்வுகள் (தூக்கத்திலேயே குழந்தை பிறப்பது) சாத்தியம் என்று அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
