CRIME
கொலையா? தற்கொலையா?.. தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம்… உடலில் கொடூர காயங்கள்.. அரியலூரில் பரபரப்பு..!!
அரியலூர் ரயில் நிலையம் மற்றும் வஞ்சத்து ஓடைக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகள் ஏதுமின்றி, தலை மற்றும் கை, கால்கள் கடுமையாக சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்துவிட்டு அளித்த தகவலின் பேரில், விருத்தாச்சலம் சரக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் அல்லது ஆடைகள் கிடைக்கிறதா என்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
உடலில் ஆடைகள் இல்லாததால், இந்தச் சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அந்தப் பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு விபத்து போலக் காட்டுவதற்காக உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டதா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய, அருகிலுள்ள காவல் நிலையங்களின் காணாமல் போனோர் புகார்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றைச் சேகரித்து போலீசார் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
