LATEST NEWS
திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நடந்த கொடூரம்.. ‘நண்பன்’ கொடுத்த அந்த ஒரு போன் கால்.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்.. சோகத்தில் உறைந்த குடும்பத்தினர்..!!
கர்நாடகம் பெல்லாரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே புதுமாப்பிள்ளை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒரு கொண்டாட்ட நாளை பெரும் சோகமாக மாற்றியுள்ளது. பெல்லாரி வட்டி பகுதியின் சமதா நகரைச் சேர்ந்த நபி ரசூல் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவர் சுமார் 15 நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. அன்று இரவு 11.30 மணியளவில் நண்பர் ஒருவர் அழைப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற நபி ரசூல், அதன்பின் வீடு திரும்பவில்லை.
நள்ளிரவு 2 மணியளவில் அவரது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெல்லாரி காவல்துறை கண்காணிப்பாளர் சுமன் பென்னேகர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த கொடூரக் கொலைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், காதல் திருமணம், தனிப்பட்ட பகை அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
