LATEST NEWS
BREAKING: தமிழக மீனவர் சுட்டுக்கொலை.. பெரும் பரபரப்பு..!!
சவுதி அரேபிய கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் 10 அன்று நடுக்கடலில் இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மயிலாடுதுறை மாவட்டம் கீழமூவர்கரை கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த மீனவர் மாவீரனின் உடலை தமிழகத்திற்கு விரைவாக கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சவுதியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காயமடைந்த மீனவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
