4 மாதக் கர்ப்பிணி மனைவியை நாய் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு… கணவன் எடுத்த கொடூர முடிவு.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

4 மாதக் கர்ப்பிணி மனைவியை நாய் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு… கணவன் எடுத்த கொடூர முடிவு.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

பெங்களூருவில் கணவன் ஒருவன் தனது 4 மாதக் கர்ப்பிணி மனைவியை நாய் கட்டும் நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின் சென்னம்மனகெரே அச்சுக்கட்டு பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது. உயிரிழந்த பெண் சொப்னா என்றும், தற்கொலை செய்துகொண்ட அவரது 30 வயது கணவர் மனோஜ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தச்சர் வேலை செய்து வந்த மனோஜின் குடும்பம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அவர் பெங்களூருவிலேயே பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆவதாகத் தெரியவந்துள்ளது. மனோஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஒரே கூட்டுக்குடும்பமாக அவர்கள் வசித்து வந்துள்ளனர். மனோஜ் கடந்த நான்கு நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை என்றும், இதனால் தம்பதியினருக்கு இடையே கடந்த சில நாட்களாகவே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதிய வேளையில், தங்களின் படுக்கையறைக்குள் மீண்டும் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.

Advertisement

இந்தத் தகராறின் போது ஆத்திரமடைந்த மனோஜ், வீட்டில் இருந்த சிவப்பு நிற நாய் கட்டும் நைலான் கயிற்றை எடுத்துத் தன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே கயிற்றைப் பயன்படுத்திப் படுக்கையறை மின்விசிறியில் தூக்கிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்; சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மனோஜ் சடலமாகத் தொங்குவதைக் கண்டு பிடித்தனர். இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in