LATEST NEWS
லைவ் நியூஸில் தெரிந்த கொடூர விபத்து…! அலறியடித்துக்கொண்டு ஓடிய பேரன்… அங்கே காத்திருந்த பேரதிர்ச்சி..!!
கனடாவின் எட்மண்டன் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேஜர் சிங் பந்தல் மற்றும் அவரது மனைவி சுரிந்தர்ஜித் கவுர் பந்தல் ஆகியோரின் வீட்டின் மீது, திங்கட்கிழமை இரவு 62 வயது நபர் ஓட்டி வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இந்த கோர விபத்தினால் வீட்டின் எரிவாயுக் குழாய் வெடித்து, கட்டிடம் முழுவதும் தீப்பிடித்துக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
அதே நகரில் வசிக்கும் இத்தம்பதியரின் பேரனான லாலி தூர் என்ற இளைஞர், தன் குடும்பத்துடன் இரவு உணவருந்திக் கொண்டிருந்தபோது தொலைக்காட்சியில் இந்த தீ விபத்து குறித்த செய்தியைக் கண்டுள்ளார். முதியவர் ஒருவர் தீயிலிருந்து தப்பிக்க மூன்றாவது மாடியிலிருந்து குதித்த காட்சி செய்தியில் ஒளிபரப்பப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அது தன் தாத்தாவின் வீடு என்பதை உணர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற தூர், தன் தாத்தாவைக் காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் போராடுவதைக் கண்டு நிலைகுலைந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தீயின் தீவிரத்தால் 3-வது மாடியிலிருந்து குதித்த தாத்தா மேஜர் சிங் பந்தல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் காலையில் கட்டிடத்திற்குள் இருந்து அவரது பாட்டியின் உடலும் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் காரைச் செலுத்திய நபர் மற்றும் கட்டிடத்தில் இருந்த மேலும் 6 பேர் காயமடைந்துள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
