சீ… என்ன பழக்கம் இது..? சொகுசுக் கப்பலில் காலைச் சொறிந்த கையால்… உணவை எடுத்துச் சாப்பிட்டப் பெண்…! வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீ… என்ன பழக்கம் இது..? சொகுசுக் கப்பலில் காலைச் சொறிந்த கையால்… உணவை எடுத்துச் சாப்பிட்டப் பெண்…! வைரல் வீடியோ..!!

Published

on

கார்னிவல் க்ரூஸ் சொகுசுமிதவை கப்பலில் பயணித்த பெண் ஒருவர் செய்த அருவருப்பான செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உணவருந்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘பஃபே’ கவுண்டர் அருகில் நின்றுகொண்டிருந்த அப்பெண், தனது ஒரு கையால் காலில் உள்ள வறண்ட தோலைச் சொறிந்துவிட்டு, அதே கையால் உணவை எடுத்துச் சாப்பிட்டது பலரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றுமொரு பயணி தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அந்தப் பெண் சுகாதாரம் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி, தனது பாதத்தில் உள்ள தோல் செதில்களைச் சொறிந்து அகற்றுவதும், பின்னர் அதே கையைத் துடைக்காமலே உணவை எடுத்து வாயில் வைப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பொதுவெளியில், அதுவும் உணவகப் பகுதியில் அவர் செய்த இந்த செயல் காண்போரை கடும் அருவருப்படையச் செய்துள்ளது.

Advertisement

இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கோபத்தையும் அருவருப்பையும் காரசாரமாகப் பதிவிட்டு வருகின்றனர். “சொகுசுக் கப்பல்களில் பஃபே முறையில் உணவருந்தும்போது இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும், “பொது இடங்களில் அடிப்படை சுகாதாரத்தைப் பேணாத இதுபோன்ற மனிதர்களால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in