LATEST NEWS
மருமகனா இல்லனா என்ன?.. என்னைக்குமே நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் தான்.. ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் போட்டோ ட்விட்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த தனுஷ் அவரின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த வருடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
மகன்கள் இருவரும் அம்மா மற்றும் அப்பா இருவரது வீட்டிலும் வசித்து வருகிறார்கள். இவர்களின் பிரிவிற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. இந்தநிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. அதே சமயம் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் ஜெய்லர் திரைப்படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
என்னதான் மனைவியுடன் சண்டை ஈட்டு அவரை பிரிந்து இருந்தாலும் ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் தனுஷ் என்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகன்தான் என தற்போது ஜெயிலர் திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு அதனை நிரூபித்துள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
It’s JAILER week 😁😁😁
— Dhanush (@dhanushkraja) August 7, 2023