LATEST NEWS
“எப்பவுமே சினிமாவின் உண்மையான கிங் தலைவர் ரஜினி தான்”.. மறைமுகமாக விஜயை சீண்டிய பிரபல நடிகர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதாவது உலக அளவில் சுமார் 500 கோடியை இந்த திரைப்படத்தின் வசூல் நெருங்கியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இதன் மூலமாக ரஜினி மீண்டும் தான் வசூல் மன்னன் என்று நிரூபித்துள்ளார் எனவும் தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய கிங் ஆப் கொத்தா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டார். அந்தப் பிரமோஷன் நிகழ்ச்சியில் ரஜினியின் ஜெய்லர் திரைப்படம் குறித்து துல்கர் சல்மான் பேசினார். அப்போது, நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்மையான கிங் யார் என்று நிரூபித்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் திரண்டு வருகிறார்கள்.
அதில் ஒரு சதவீதம் மக்கள் என்னுடைய கிங் ஆப் கொத்தா வந்தாலே அதுவே பெரிய சாதனை என்று துல்கர் சல்மான் பேசியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் விஜயை தாக்கி தான் இப்படி பேசியுள்ளார் என்று கூறி வருகின்றனர். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.