LATEST NEWS
விஜய் பாணியில் மாணவர்களை அழைத்து பரிசு வழங்கிய லெஜெண்ட் சரவணன்.. கூடவே ரசிகர்களுக்கு சொன்ன சூப்பர் அப்டேட்..!!

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சரவணன் அருள்.தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார்.தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா மற்றும் தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை வைத்து அவர்களுடன் இணைந்து நடித்த விளம்பரம் எடுத்தார். அதனால் பலரும் இவரை கேலி செய்து வந்தனர். அதற்கெல்லாம் செவி சாய்க்காத சரவணன் அடுத்த கட்டமாக படங்களின் நடிக்கும் ஆசையை நிறைவேற்றினார்.
அதன்படி தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்தார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்த திரைப்படத்திற்காக லெஜெண்ட் சரவணன் கதை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் லட்சன் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சமீபத்தில் விஜய் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய நிலையில் தற்போது அதனைப் போலவே வளர்ந்து வரும் மாணவர்களை அழைத்து லெஜென் சரவணன் பரிசு வழங்கி அவர்களுடன் நடனம் ஆடினார். அது மட்டுமல்லாமல் தான் அடுத்து நடிக்கப் போகும் படத்திற்கான கதையை தேர்ந்தெடுத்து விட்டதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த
தருணம்#Legend #Legendsaravanan @yoursthelegend pic.twitter.com/LocspXpDuX— Legend Saravanan (@yoursthelegend) August 15, 2023