LATEST NEWS
அன்னைக்கு அது மட்டும் நடக்கலனா நான் தற்கொலை பண்ணிருப்பேன்… பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகர் லிவிங்ஸ்டன்..!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் தான் அதிகமாக நடித்துள்ளார். இவருக்கு என்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை லிவிங்ஸ்டண் பகிர்ந்துள்ளார். அதில், நான் பாக்கியராஜிடம் இயக்குனராக சேர்வதற்காக அவரின் வீட்டின் முன்பு தினமும் நின்று கொண்டிருப்பேன்.
ஒரு நாள் அவர் என்னை பார்த்து உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றால் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அவர் சொன்னது போலவே நானும் காத்திருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது.
அப்போதுதான் இறுதியாக பாக்கியராஜ் சாரிடம் சென்று வாய்ப்பு கேட்கலாம் அவர் இல்லை என்று மறுத்து விட்டால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவரை சந்திக்க சென்றேன். உடனடியாக பாக்கியராஜ் சார் உதவி இயக்குனராக என்னை சேர்த்துக் கொண்டார் என்று லிவிங்ஸ்டன் உருக்கமாக பேசியுள்ளார்.
