தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன்.

இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார்.

அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார்.

அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் தான் அதிகமாக நடித்துள்ளார்.

இவருக்கு என்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது.

இப்படி பல புகழுக்குரிய இவர் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளன.

இவரின் மூத்த மகள் ஜோவிதா பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக சன் டிவியில் பல சீரியல்களில் இவர் நடித்து வருகின்றார்.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இவர் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.