தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்தான் பிரபு. இவரும் தனது தந்தையைப் போலவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்துள்ளார்.

இதனிடையே இவர் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். இவரின் மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் கூட பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பிரபுவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையில் சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் கற்களை அகற்றி உள்ளனர். தற்போது பிரபு நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.