‘இப்படி நடந்துருக்கவே கூடாது’… பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்… என்ன நடந்தது தெரியுமா?… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இப்படி நடந்துருக்கவே கூடாது’… பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்… என்ன நடந்தது தெரியுமா?…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தற்பொழுது இவர் நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் வேட்டையின் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் மிரட்டியுள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதில் சந்திரமுகி 2 நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். விழாவில் கல்லூரி மாணவரை பவுன்சர்கள் தாக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டு மன்னிப்பு கோரி இருக்கிறார். ‘எனக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இந்த சம்பவம் பற்றி தெரியாது. அது வெளியில் நடந்திருக்கிறது.’

‘எனக்கு மாணவர்கள் என்றால் எவ்வளவு பிடிக்கும் என எல்லோருக்கும் தெரியும். அதனால் இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எதிரானவன் தான். அமைதி மற்றும் மகிழ்ச்சி எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என விரும்புபவன் நான். அவர் மாணவர் என்பதால் இது நடந்திருக்கவே கூடாது. இந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் இப்படி நடக்கவேண்டாம் என பவுன்சர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என லாரன்ஸ் கூறி இருக்கிறார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in